• Tue. Mar 31st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

புதிய அரசு விரைவு மிதவை பேருந்து சேவை துவக்க விழா ..,

ByT. Balasubramaniyam

Feb 6, 2026

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், ஜெயங்கொண்டம் முதல் சென்னை வரை (வழி: ஆண்டிமடம், விருத்தாசலம்) செல்லும் புதிய அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து சேவையை மாவட்ட திமுக செயலாளர்,போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன், ஜெயங்கொண்டம் நகர் மன்ற துணைத் தலைவரும், நகர திமுக செயலாளர் வெ.கொ.கருணாநிதி, மாவட்ட திமுக துணை செயலாளர் கணேசன், ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக செயலாளர்கள் தனசேகர், நா .கணேசன், அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.