• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பசுமையாக்கும் 100 நாள் பணியாளர்களுக்கு பாராட்டு…

ByT. Balasubramaniyam

Feb 5, 2026

அரியலூர் மாவட்டத்தை பசுமையாக மாற்ற தொண்டு நிறுவனங்கள் இயற்கை ஆர்வலர்கள் பலரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமியிடம் இயற்கை பசுமை ஆர்வலர்கள் தொடர்ந்து வைத்த கோரிக்கையினை ஏற்று மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு உதவிடும் வகையிலும் பறவைகள் கிளி அணில் மைனா குருவிகள் உணவு உண்ணும் வகையிலும் பழவகை மரங்களும் கொட்டைகளை உண்ணும் பறவைகளுக்கும் உணவு தரும் வகையிலான மரங்களையும் வளர்த்தெடுக்கும் வகையில் அரியலூர் அருகே உள்ள வாரணவாசி ஊராட்சிக்குட்பட்ட 59 ஏக்கர் பரப்பளவில் உள்ள சமத்துவபுரம் அருகே அறிவுசார் சூழலியியல் பூங்காவில் நாட்டு வகை மரங்கள் நாவல் இலுப்பை புங்கன் நீர்மருது கொடுக்காய்ப்புளி எலுமிச்சை சிகப்பு கொய்யா பூவரசு சீத்தா மந்தாரை புளி கருமருது பாதாம் வேம்பு தான்றிக்காய் மா உள்ளிட்ட ரகங்களில் 1 இலட்சம் மரக்கன்றுகளை 7 அடி உயரம் வரை வளர்த்து 2026 ஆகஸ்டு மாதம் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளுக்கும் நன்கு வளர்ந்த தரமான மரக்கன்றுகளாக்கும் திட்டத்தில் தேசிய ஊரக திட்டம் மூலமாக 100 நாள் பணியாளர்கள் 35 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்ட 950 பெண்களும் 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 50 பேர் என 1000 பேரின் அர்ப்பணிப்போடு மாவட்டத்தில் முன்னோடியாக கொண்டு வளர்த்து வழங்க பெருந்திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது. இப்பணியால் விரைவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளும் பசுமையாக மாறும் என மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

1 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக மரக்கன்றுகள் வளர்த்து வரும் பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமன் மாவட்ட ஊராட்சி செயலாளர் திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா இயற்கை ஆர்வலரும் வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தங்க சண்முக சுந்தரம் சோலைவனம் ஒருங்கிணைப்பாளர் இளவரசன் ஆகியோர் பார்வையிட்டு அர்ப்பணிப்போடு பணிசெய்யும் தேசிய ஊரக திட்டத்தில் 100 நாள் வாரணவாசி கிராம மக்களைப் பாராட்டினர். இதுகுறித்து மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமன் கூறுகையில் தமிழகத்திற்கு முன்னோடி சூழலியல் பூங்காவாக அரியலூர் மாவட்டம் திகழும் என்றார். மேலும் மரங்கள் வளரும் போது நிலத்தடி நீரில் உள்ள கரியமிலவாய மாறி நன்னீராகும் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு நல்ல தண்ணீரை உருவாக்க இயலும். மழை நீர் தேங்கும் போது வறட்சி நிலை மாறி பசுமையாகும் சூழல் உருவாகும் என்றார்.