• Sat. Jan 31st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

2 கிலோ 40 கிராம் கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது..,

BySeenu

Jan 31, 2026

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று (30.01.2026) பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ஹவுசிங் போர்டு காலனி அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ராஜ்குமார் (43), சுரேஷ் (24) மற்றும் சந்துரு (23) ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார்.