• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சட்டவிரோதமாக பணிபுரிந்து வந்த 11 பங்களாதேஷியர்கள் கைது..,

BySeenu

Jan 30, 2026

கோவை கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆயத்த ஆடை நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்களாதேஷை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அன்னூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான குழுவினர் அங்கு விசாரணை மேற்கொண்டு பங்களாதேஷை சேர்ந்த 11 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களை அன்னூர் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர்.அப்போது,அவர்கள் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவது தெரிய வந்தது.தொடர்ந்து அவர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா? என விசாரித்து விட்டு சேலம் ஆத்தூரில் உள்ள அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.