சென்னை அடுத்த பம்மல் சங்கர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ ஸ்ரீ தாகூர் அனுகூல் சந்திரர் அவர்களின் 138-வது பிறந்தநாள் மற்றும் சத்சங் விஹார் 26-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் தேர்தல் அதிகாரி சத்ய பிரகாஷ் சாகுப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவையொட்டி பரதநாட்டியம், மயிலாட்டம், ஓயிலாட்டம், செண்டை மேளம், ஒடிசி நடனம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் அரங்கேறி பார்வையாளர்களை கவர்ந்தன. அதேபோல், ஸ்ரீ தாகூர் அவர்களின் ஆன்மீக மருத்துவம் மற்றும் தொழில்முறை சிந்தனைகளை விளக்கும் கருத்தரங்கமும் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அனுகா, இன்றைய தலைமுறையினர் அமைதி, நிம்மதி தேடி பல்வேறு வழிகளை நாடுகின்றனர்; ஆனால் சத்சங் விஹாருக்கு வருபவர்கள் மன அமைதியுடன் திரும்புகின்றனர் எனத் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் கல்கத்தா, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சீடர்கள் ஸ்ரீ ஸ்ரீ தாகூர் அனுகூல் சந்திரரின் ஆசிரமத்திற்கு வந்து மன அமைதி பெறுவதாகவும், இதன் மூலம் சமூக வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் துணையாக அமையும் எனவும் கூறினார்.
விழா முடிவில், ஏராளமான சீடர்கள் மஹான் ஆசிரமத்திற்கு சென்று தரிசனம் செய்து ஆன்மீக அனுபவம் பெற்றனர்.






