விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம் பண்ணையில் அமைந்துள்ள 90 ஆண்டுகள் பழைமையான ஆர். சி. தொடக்கப்பள்ளியில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் அருட்பணி வனத்தையன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பெ. இக்னேஷியஸ் கொடி ஏற்றினார்.

சிறப்பு விருந்தினராக சங்கர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன. உதவி ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார் .
தேசிய கீதம் பாடப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.







