கன்னியாகுமரி, ஜன. 25: தேசிய உரிமைகள் களம் நுகர்வோர் அமைப்பின் மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாநில நிர்வாக செயலர் கார்த்திகா தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், அமைப்பின் வளர்ச்சி மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு நிலைப்பாடு ஆகியவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாநில முதன்மைச் செயலர் மணிவாசகம், மாநில தலைமை நிலைய செயலர் கோவிந்தராஜன், மாநில அமைப்பு செயலர் செல்வகணபதி, மாநில அமைப்பு செயலர் மூர்த்தி, மண்டல செயலர் லோகநாதன், மாநில மகளிர் அணி தலைவி ஆறுமுக தேவி,
துணைத் தலைவி ரெனி, மாநில இளைஞரணி துணைச் செயலர்கள் முருகானந்தம், குகன், மாநில வழக்கறிஞர் செயலர் கண்ணன், மாநில துணை செயலர் முகமது பிலால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்ட செயலர் கோபு அவர்கள் நன்றி கூறினார்.







