• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கோவையில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்..,

BySeenu

Jan 25, 2026

கோவை மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து உள்ள காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் எல்லை மீறிச் செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதியை ஒட்டி உள்ள மருதமலை, அடிவாரப் பகுதியான வடவள்ளியில், கடந்த சில வாரங்களாகக் காட்டுப் பன்றிகள் கூட்டம், கூட்டமாகச் சாலைகளில் உலா வருவதோடு, அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளையும், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களையும் தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

ஊருக்குள் புகுந்து உள்ள இந்தப் பன்றிகள், மக்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் எப்போது, எங்கு இருந்து பாயும் என்றே தெரியாத ஒரு நிச்சயமற்ற சூழல் அங்கு நிலவி வருகிறது.

​மக்களின் தொடர் புகார்களை அடுத்து, வனத்துறையினர் இந்தப் பன்றிகளைப் பிடிக்க ஆங்காங்கே கூண்டுகளை அமைத்த போதிலும், அவை எதிலும் சிக்காமல் பெரும் சவாலாக இருந்து வருகின்றன.

வனத்துறையின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனுக்களை அனுப்பியும் இதுவரை முறையான தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் தமிழக அரசு மற்றும் நடவடிக்கை எடுக்காத நடவடிக்கை எடுக்காத வனத்துறையைத் கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வடவள்ளி மும்ம நாயக்கர் வீதியில் குட்டிகளுடன் வந்த காட்டுப்பன்றிகள் அங்கு இருந்த தெரு நாய்கள் குரைத்ததால் அங்கும் இங்கும் ஓடியது பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபரும் அச்சமடைந்தனர் அந்த செல்போன் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.