உசிலம்பட்டியில் பொதுமக்களுடன் காவல்துறை இணைந்து தலைகவசத்தின் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் தலைகவசம் அணிந்தவாறு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 1 முதல் 31 ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும் தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுடன் காவல்துறையினர் இணைந்து தலைகவசம் அணிந்தவாறு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.,

உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பனிமனையில் துவங்கி இந்த பேரணியை உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன், வாகன போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி இணைந்து கொடி அசைத்து துவக்கி வைத்தனர்., மதுரை ரோடு, தேனி ரோடு, பேரையூர் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று தேவர் சிலையில் நிறைவுற்றது., தலைக்கவசத்தின் அவசியத்தை உணர்ந்தும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.





