விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த புத்துரை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தனியார் இடத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த இடத்திற்கு சொந்தக்காரரான சீனிவாசபாண்டியன் என்பவர் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையை வேலி போட்டு அடைத்ததால் நாங்கள் இன்னும் செல்ல முடியாமல் குழந்தைகள் பள்ளிக்கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் எங்களுக்கு நடைபாதை தெரிந்து விட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதிக்கு சென்று அதன் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தை பாதை வசதி செய்து கொடுத்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.





