• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குமரி மாவட்ட மாநாடு..,

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட 16-ஆவது மாநாடு குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

பிறதி குழுவினர் அறிவியல் பாடல் பாட நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பேராசிரியர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெனித் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் விஜயலெட்சுமி மறைந்த ஆளுமைகளுக்கு நினைவேந்தல் உரையாற்றினார். மாநிலச் செயலாளர் முத்துலெட்சுமி மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

சிறப்புரை மற்றும் கௌரவம்:

நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிபதி ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சமூகத்தில் அறிவியல் விழிப்புணர்வின் அவசியம் குறித்தும் மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை எடுத்துச் செல்லும் மாபெரும் பொறுப்பு இதுபோன்ற மக்கள் அறிவியல் இயக்கத்துக்கு உள்ளது என்று விரிவாகப் பேசினார். தொடர்ந்து, அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற துளிர் திறனறிதல் தேர்வில் சாதனை புரிந்த ஒன்றிய குழுக்களுக்கு மாவட்டத் துணைத் தலைவர்கள் டோமினிக் ராஜ் , பேரா. ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர்கள் டாக்டர் கிரிஜா,டாக்டர் ஷெரின் ஷீபா, ஆகியோர் புற்றுநோய் குறித்தும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்தும் அவை குறித்த பரிசோதனை ஆயுஷ் கெட்ட உதவியுடன் இலவசமாக மருத்துவக் கல்லூரியில் நடைபெறுவது குறித்தும் எடுத்துரைத்து ஆரம்ப நிலையிலேயே அவற்றை சரி செய்து விடலாம் என்று கூறினர். பிரசவத்திற்கு முன்பும் பின்பும் தாய்மார்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சரி செய்வதற்காக மருத்துவ ஆலோசனைக் குழு கல்லூரியில் செயல்படுவது குறித்து வீட்டிற்கு வந்து மருத்துவ ஆலோசனை அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

மாநாட்டில் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதிக் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுகதன், மேனாள் மாநிலப் பொருளாளர் ராதா, மேனாள் மாநிலப் பொதுச் செயலாளர் அமலராஜன், மாநிலச் செயலாளர் ஜினிதா, மாவட்ட நிர்வாகிகள் ஜாண்சிலிபாய், ஜினோபாய் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார்கள்.