விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள புல்லக் கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் கணேசன் (வயது 65) என்பவருக்கு சொந்தமான பேப்பர் அட்டைகள் இருப்பு வைக்கும் குடவுன் வைத்துள்ளார். அதில் தீ பற்றி எரிவதாக அக்கம் பக்கத்தினர் ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் .

அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





