திண்டுக்கல்லில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி, MGR-நகரை சேர்ந்த குமார் – விஜயலட்சுமி இவர்களது 3-வது மகன் மாற்றுத்திறனாளி கோபிநாத்(28) இவர் உடல்நல குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டதாக தெரிவித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மூளை சாவு அடைந்தார்.
இதனை அடுத்து பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் தாங்களாக முன்வந்து உடல் உறுப்புகளை தானம் செய்வதாக மருத்துவ நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.





