• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பட்டினியால் உயிரிழந்த சிறுவன்… எந்த ஜகத்தினை நாம் அழிக்க போகிறோம்?

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” பாரதியின் பாடல் இந்த பாடலின் வரிகள் எந்த அளவுக்கு உளமாற ஏற்கின்றோம் என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆம் அப்படி ஒரு சம்பவம் தான் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது.டிச.16 ந் தேதி விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தள்ளுவண்டியில் ஐந்து வயது சிறுவனின் உடல்கிடந்ததை கண்டு தள்ளு வண்டி உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுக்க உடலை மீட்ட போலீசார் சிறுவன் கொலை செய்து வீசப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர்.

அப்போது தான் அந்த செய்தி பேரிடியாக வந்தது. சிறுவனின் உடல் உடற்கூராய்வின் போது தான் சிறுவன் கொலை செய்யப் படவில்லை, பசியின் கொடுமையால் பட்டினியால் இறந்துள்ளான் என்பது தெரிய வந்தது.

அம்மா உணவகம், கோயில்களில் 3 வேளை அன்னதானம் என இத்தனை இருந்தும் சிறுவனின் பசியை போக்க எதுவும் உதவ முன்வரவில்லை.

ஐந்து வயது சிறுவனின் உடலை வாங்க கூட யாரும் இல்லாமல் பிஞ்சு உடல் பிணவறையில் உள்ளது.தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்று சொன்னான் பாரதி.

இன்று நம் முன்னரே ஒரு சிறுவன் பசியால் இறந்துள்ளான். இதனை வெறும் செய்தியாக கடந்து விட முடியாது. காரணம் இது பசி வறட்சி பஞ்சம் இவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

இந்தியா பசி அட்டவணையில் 103 வது இடத்தில் உள்ளது. 2018டைனிக் பஸ்கர் வெளியிட்டு உள்ள செய்தியில் “இந்தியாவில் மோடி தலைமையிலான அரசாங்கம் இந்த விஷயத்தில் முற்றிலும் தோல்வியுற்றது, நாடு நான்கு ஆண்டுகளில் 55-வது இடத்திலிருந்து 103-வது இடத்திற்கு வந்துள்ளது. நேபாளம் மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகள் கூட முன்னணி இடத்தை பெற்று உள்ளன என குறிப்பிட்டு உள்ளது.

இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 20.8 சதவீதம் என்பது மிக அதிகம். இந்தப் பட்டியலில் உள்ள வேறு எந்த நாட்டைவிடவும் அதிகம்.” என்று தரவரிசைப் பட்டியல் குறித்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலைக்குள் தமிழகம் சென்று விடக்கூடாது. இது குறித்து உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும்.