விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள மொட்டமலை பகுதியில் செயல்படும் சுரன் காலேஜ் செவிலியர் கல்லூரியில் தை திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் தமிழக மற்றும் கேரளா மாணவிகள் இணைந்து கல்லூரி நிர்வாகி ராஜா ஏற்பாட்டில் கல்லூரி சேர்மன் குவைத்ராஜா தலைமையில் தமிழக கேரளா சேர்ந்த 1500 க்கு மேற்பட்ட மாணவிகள் தமிழர் பாரம்பரிய உடைகள் அணிந்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து தப்பாட்டம் ஒயிலாட்டம். சிலம்பம் சுற்றியும் . கேரளா செண்டை மேளத்திற்கு நடனமாடி 51 பொங்கல் பானையில் வைத்து பொங்கல் வைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி . இராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பஷினா பீவி வருவாய் ஆய்வாளர் விஷ்ணு மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்





