கோவை மாநகரின் மிக முக்கியமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி சாலையில் இன்று பிற்பகல் ஓடும் வாகனத்தில் இருந்து இரும்பு பைப்புகள் திடீரென சாலையில் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நல்வாய்ப்பாக முன்னாள் சென்ற வாகன ஓட்டிகள் உயிர்த்தபினர்.

தொழில் நகரமான கோவையில் மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை எப்பொழுதும் அதிகமாக இருக்கும். இன்று பிற்பகல் திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ஒரு பொலிரோ பிக் அப் வாகனம் இரும்பு பைப்புகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டு இருந்தது.
அப்பொழுது வாகனத்தில் போதிய பாதுகாப்புகள் இன்றி அடுக்கி வைக்கப்பட்டு இருந்த இரும்பு பைப்புகள் திடீரென சாலையில் சரிந்து விழுந்தன. பைப்புகள் விழுவதை கவனித்த ஓட்டுனர் உடனடியாக பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தினார்.

பைப்புகள் சரிந்த போது அந்த வாகனத்தின் அருகே மற்றும் முன்னால் சென்றவர்கள் மீது பாய்ந்து உயிர் சேதம் ஏற்படுத்தி இருக்கும், இதை அடுத்து வாகனங்கள் கொள்ளளவை விட அதிக நீளமான மற்றும் அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து காவல் துறையினர் கண்காணித்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.




