• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவதி..,

ByKalamegam Viswanathan

Jan 2, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பக்தர்கள் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக விழா காலங்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சொல்ல முடியாத துயரத்திற்கு பக்தர்கள் பொதுமக்கள் ஆளாகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு ஜெனக நாராயண பெருமாள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பெருமாளை தரிசனம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதாக கூறினர்

அதாவது ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்பவர்களால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர் கூடுதலாக ஜெனகை மாரியம்மன் கோவில் முதல் சண்முகானந்த பவன் வரை இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரப்புகள் காரணமாக வாகனங்கள் எதிரெதிர் திசைகளில் வர முடியாத அளவு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இதன் காரணமாக ஓட்டுநர் நடத்துனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு அதன் காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது இதனை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நீண்ட வரிசையில் வாகனங்களை நிறுத்தி சென்றதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

போதுமான அளவு காவலர்களை நியமிக்காததால் அங்கு இருந்த ஒரு சில காவலர்களால் வாகனங்களை நிறுத்துவோர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது

இதன் காரணமாகவும் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தவிர்க்கும் பொருட்டு விழா காலங்களில் மாரியம்மன் கோவில் பகுதியை ஒரு வழி பாதையாக மாற்றி போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் காவல்துறையினர் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கோவில் முன்பு நிறுத்தாமல் அதற்காக தனியாக இடம் ஒதுக்கி வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அடுத்தடுத்து திருவிழா காலங்கள் நடைபெற உள்ள நிலையில் மாரியம்மன் கோவில் முன்புறமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறையினர் பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.