கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கரும்புக்கடை சாரமேடு ரோடு பகுதிகளில் 86-வது வார்டு,84 வது வார்டு மற்றும் 62 வாக்கப்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்த சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகளால் மொத்தம் 20 பகுதிகளை சேர்ந்த 2000-க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு இடங்களை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்புக்கடை சாரமேடு பகுதி குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரிடம் மனு அளித்தனர்.

மேலும் இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளிக்கும் தற்பொழுது வர எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் இதனால் அப்பகுதியில் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளிக் குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட பலர் இதனால் அவதி அடைந்து வருவதாக மூன்று வார்டுகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களை பொதுமக்களுடன் இணைந்து கோவை மாநகராட்சி வளாகத்தில் புகார் அளித்தனர்.





