மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் அர்ச்சகர் பார்த்தசாரதி தலைமையில் யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

தொடர்ந்து சரியாக காலை 5:20 மணிக்கு ஜெனக நாராயண பெருமாள் பரமபத வாசல் வழியாக நம்மாழ்வார்கள் வரவேற்க பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து கோவிலின் உள்பிரகாரங்களில் பெருமாள் ஊர்வலம் ஆக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
அதிகாலை முதல் இரவு வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜெனக நாராயண பெருமாளை தரிசனம் செய்து சென்றனர். தொடர்ந்து இரவு சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு அருள் பாலித்தார் ஆங்காங்கே தேங்காய் உடைத்து பொதுமக்கள் பெருமாளை வழிபட்டனர் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தாரணி தலைமையில் முரளிதரன் உள்ளிட்ட பணியாளர்கள் உபயதாரர் ஐயப்பன் செய்திருந்தனர் அர்ச்சகர் பார்த்தசாரதி தலைமையிலான குழுவினர் பூஜைகள் செய்தனர் நீண்ட நேரம் பொதுமக்கள் பொறுமையாக வரிசையில் வந்து ஜெனக நாராயண பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்.




