மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அன்னதானம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி பாலாஜி தலைமை வகித்தனர்.

சோழவந்தான் பேரூர் செயலாளர் கிருஷ்ணன் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பாலாஜி அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இதில் நிர்வாகிகள் அவைத்தலைவர் சரவணன் பொருளாளர் முருகன் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி குணசேகரன் பேரூர் துணை செயலாளர் கோபால் மனோகரன் இளைஞரணி ஜெயச்சந்திரன் டேனியல் சங்கிலி மற்றும் வார்டு செயலாளர்கள் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




