தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK.வாசன் 61 வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் காரை ஊராட்சிக்குட்பட்ட மலையப்ப நகரில்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை ஆர்.சுப்ரமணியன் தலைமையில் மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் முன்னிலையில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த அவரது பேனருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து மலையப்ப நகரில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில நிர்வாகி ஜெயராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

மேலும் இந்நிகழ்வில் கிருஷ்ண ஜனார்த்தனன் மாநில செயற்குழு உறுப்பினர் , வட்டார தலைவர் இளவரசன் அசோகன், பெரம்பலூர் நகரத் தலைவர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




