அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 10 ருபாய் எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 20 ரூபாய் உயத்தி வழங்கவேண்டும்,

கடந்தமூன்றுஆண்டுகளாக பால் விலையை அரசு உயர்த்த வில்லை
தீவனங்கள் மற்றும் மாடுகளின் விலை உயர்ந்து விட்டது ஆகவே அரசு இந்த விலையை உயர்த்தவேண்டும்,மருதையாற்றில் இரண்டு பக்கமும் அளவீடுகள் செய்து எல்லை கல் நட்டு தூர்வாரி கரைகள் அமைக்கவேண்டும் ,மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெற்று கெடு தேதிக்குள் பணம் கட்டிய விவசாயிகளுக்கு 10 தினங்களில் மீண்டும் கடன்வழங்கவேண்டும் ,புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் அதிக அளவில் தண்ணீர் திறந்து சுக்கிரன் ஏரி உள்பட அனைத்து ஏரிகளும் நீர் நிரப்ப வேண்டும்,
விக்கிரமங்கலம் முதல் குருவாடி வரை உள்ள சாலையை அளவீடு செய்து எல்லை கல் போட வேண்டும் மாவட்டத்தில் சாய்வாக உள்ள அனைத்து மின் கம்பம் மற்றும் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் ஆகியவற்றை கண்டறியப் பட்டு உடனடியாக சரிசெய்யவேண்டும் ,குருவாடி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள சுமார் 30 ஏக்கர் நெல் பயிர் அடிக்கடி தண்ணீரீல் மூழ்கி உள்ளதால் வடிகால் வாய்கால் தூர் வார வேண்டும், அரசு அறிவித்த அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் இடையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவனையுடன் கூடிய தடுப்பணை திட்டத்தை விரைவில் அரசு செயல் படுத்த வேண்டும்.
உள்ளிட்டகோரிக்கைகளை அரசு கவனம் செலுத்தி, விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் பேசியதாவது,அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இது நாள் வரை 855.5 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் களுக்கு தேவையான 1630 மெ.டன் யூரியா, 862 மெ.டன் டி.ஏ.பி 308 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1603 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது.இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் மூலம் 218 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம 215 மெ.டன் என கூடுதலாக 433 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 85 மெ.டன்; நெல்விதைகள் கையிருப்பில் உள்ளது.நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ.17.50 வழங்கப் படுகிறது. மேலும் நெல் நுண்சத்து, உயிர்உரங்கள், சூடோமோனாஸ்,ட்ரைக்கோடெர்மா போன்ற உயிரியல் காரணிகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. வேளாண் அடுக்குத் திட்டம்: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெரும் வகையில் வேளாண்மைத் துறையில் வேளாண்மை அடுக்குத்திட்டம் உருவாக்கப்பட்டள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்கள் ஆகியவை கிரைன்ஸ் என்ற இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கிரைன்ஸ் வலைதளத்தின் மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி படுத்திட முடியும். இது ஒற்றை சரள வலை தளமாக செயல்படுவதால் விவசாயிகள் 13 துறைசார்ந்த திட்டங்க ளுக்கும், ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். எனவே பதிவு செய்யாத விவசாயி கள் உடனடியாக உரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் ஆகியோர்களை அணுகி பயன்பெறுமாறு மாவட்டகலெக்டர்
பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா,வேளாண்மை துணை இயக்குநர் கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) த.ராதாகிருஷ்ணன், மாவட்ட நிலை அலுவலர் கள், இதர அரசு அலுவலர் கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




