• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மீனவகுடும்பத்தினர் கடலில் கிறிஸ்துமஸ் விழா..,

தெற்காசிய மீனவர் தோழமை சார்பாக கடல் கிறிஸ்மஸ் விழா குளச்சல் ஆழ்கடல் பகுதியில் விசைப்படகில் நடைபெற்றது. விழாவிற்கு தெற்காசிய மீனவர் தோழமை தலைவர் அருட்தந்தை பீட்டர் லடிஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.

குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரெக்சன் முன்னிலை வகித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த மருத்துவர் நிகில் ஜோசி மற்றும் பீகார் மாநிலத்தை சார்ந்த பொறியாளர் சுவாமிநாதன், மார்த்தாண்டம் பங்குத்தந்தை ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பீகார், மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களை சார்ந்த பொதுமக்களும், தமிழகத்தில் சிதம்பரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மக்களும், குமரி மாவட்டத்தை சார்ந்த மீனவ பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் விசைப்படகுகளிலும் நாட்டு படக்குகளிலும் கட்டு மரங்களிலும் கடலுக்குள் சென்றார்கள்.

குளச்சல் நிஷாந்த் என்பவருக்கு சொந்தமான லியா ராசேன் விசைப்படகில் குழந்தை இயேசுவுக்கு குடில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த விசைப்படகானது நட்சத்திரங்களாலும் கொடிகளாலும் பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விசைப்படகுகளும் நாட்டுப்படகுகளும் கட்டு மரங்களும் மீனவர்கள் மீன் பிடிக்க கூடிய நடுக்கடலில் இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கடல் கிறிஸ்மஸ் விழாவாக கொண்டாடினார்கள். இயேசு கிறிஸ்துவுக்கு விசைப்படகிலே குடில் அமைத்து பிறந்த நாளை முன்னிட்டு கிறிஸ்மஸ் கேக் வெட்டி குழந்தைகளும் பெரியோர்களும் பெண்களும் பகிர்ந்து உண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளருமாகிய அருதந்தை சர்ச்சில் கூறும் போது இயேசு கிறிஸ்து உலக மக்கள் அனைவருக்கும் மீட்பராக பிறந்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாக உலகமெங்கும் கொண்டாடுகின்றார்கள். இயேசு கிறிஸ்துவுக்கும் மீனவர்களுக்கும் ஒரு சிறப்பு உறவு உண்டு. அவர் தனது சீடர்களாக முதன் முதலில் மீனவர்களை தான் பெயர் சொல்லி அழைத்ததோடு மீனவர்களுக்கு மீன் கிடைக்காத நேரத்திலே கடலிலே வலை வீசச் சொல்லி அதிக மீனை கொடுத்தவர்.

மேலும் கடலில் படகு பயணம் செய்த நேரத்திலே புயல் காற்று வீசியபோது அந்த புயலை கடிந்து கடலிலே அமைதியை ஏற்படுத்தியவர். தனது மீனவர்களுக்கு ஆழ் கடலிலே ஆபத்து வந்த நேரத்திலே கடல் மீது நடந்து சென்று அவர்களை காப்பாற்றியவர். அந்த இயேசு பிறந்தநாளை மீனவர்கள் எங்களுக்காக கடலிலே விசைப்படகிலே ஆண்டவர் பிறந்திருக்கின்றார் என்ற மகிழ்ச்சியை கேக்குவெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த கௌரி நிகில் என்பவர் கூறும் போது கடலிலே விசைப்படகில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது எங்களது வாழ்வில் இது முதல் அனுப்பவம். மீனவர்களுடன் சேர்ந்து கடலூர் கிறிஸ்மஸ் கொண்டாடியது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியை மீனவர்களோடு பகிர்ந்து கொண்டதும் எங்களுக்கு ஆசீர்வாதமாக நினைக்கின்றோம். இது எங்களுக்கு ஒரு புது அனுபவம். இதுவரையும் கடலுக்குள் நாங்கள் வந்ததில்லை ஆனால் மீனவர்கள் எங்களை விசைப்படகில்அவர்களது கிறிஸ்துமஸ் விழாவில் எங்களை ஈடுபடுத்தி அவர்களது மகிழ்ச்சியில் எங்களை பங்கு கொள்ள வைத்ததற்கு நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றோம்.

இயேசுவின் ஆசீர் மீனவர்களுக்கும் எங்களுக்கும் கிடைத்துள்ளது. இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக மீனவர்களோடு கடல் கிறிஸ்மசை நாங்கள் சிறப்பிப்போம். இந்த நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நடனமாடி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி அனைவருக்கும் ஹாப்பி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.