• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு..,

ByT. Balasubramaniyam

Dec 24, 2025

எம்ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் வடிவேல்முருகன் தலைமையில், மாநில அமைப்பு செயலாளர் பருக்கல் க.புகழேந்தி,மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் எஸ் ஆர் கே கோவிந்தராஜ்,மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சேதுராமன்,மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில்,மாவட்ட அவைத் தலைவர் ஆப்டிகல்ஸ் ரவிச்சந்திரன்,

மாவட்ட துணை செயலாளர்கள் பழனிமுத்து, சங்கீதா, மாவட்ட பொருளாளர் பொன்முடி, ஒன்றியச் செயலாளர்கள் கோபிநாதன், கனகசபாபதி, பழனிச்சாமி,இளவழகன் இராஜேந்திரன்,முனியமுத்து, வெங்கடாசலம் ,நகரச் செயலாளர்கள் முரளி,வழக்கறிஞர் கமலக்கண்ணன்,உட்படமாவட்ட ஒன்றிய நகர பலரும், முன்னதாக மங்காய் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள எம்ஜிஆர் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கிளம்பி நகராட்சி பேருந்து நிலையம் வந்தடைந்த அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.