கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஷோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்(SDTU) சார்பாக மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரடை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய SDTU மாநில பொது செயலாளர் ரவூப்நிஸ்தார்:-

மத்திய அரசு கடந்த 2019,2020-ம் ஆண்டு போராடி பெற்ற நான்கு தொகுப்பு சட்டங்கள் திருத்தத்தில் கார்ப்பரேட்டுகள் மற்றும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.எனவே இந்த நான்கு தொகுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் மாநில அரசிடம் ஆட்டோக்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்துக்கோரி வலியுறுத்தியும் தற்பொழுது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடந்த 10 வருடங்களாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும்,பெட்ரோல் டீசல் விலை உயர்வும் அதிக அளவில் உயர்ந்தும் கூட இன்று வரை ஆட்டோக்களுடைய மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தவில்லை என குற்றம் சாட்டினர்.
தற்போது இருசக்கர வாகனத்தில் பயணிகளை அழைத்துச் செல்வதை ஓலா,உபர்,ரேபிடோ என கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து வருகின்றது. கர்நாடக அரசு இருசக்கர வாகன டாக்ஸி தடை செய்ய உள்ளது ஆனால் தமிழக அரசு இருசக்கர வாகனம் டாக்ஸியை தடை செய்யாமல் இருப்பது வேதனைக்குரியது என தெரிவித்தனர்.

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நீர்த்துப் போகும் விதமாக பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது கண்டனத்துக்குரிய தெரிவித்தனர்.




