குமரியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசுக்கு எதிராக தீ பந்த ஊர்வலம். சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் பங்கேற்றார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வந்த மோடி அரசு, முடிந்தால் இந்திய ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை நீக்க முடியுமா ? கோட்சே பக்கம் நிற்கும் உங்களுக்கு நிச்சயம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஷ் குமார் நடைக்காவு பகுதியில் பேட்டி.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை உறுதி திட்டம் (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,
கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவு பகுதியில் இருந்து நித்திரவிளை பகுதிக்கு இளைஞர் காங்கிரசார் தீ பந்தம் ஏந்தி நடை பயணமாக சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறும் போது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வந்த மோடி அரசு, முடிந்தால் இந்திய ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை நீக்க முடியுமா ? கோட்சே பக்கம் நிற்கும் உங்களுக்கு நிச்சயம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.என தெரிவித்தார்..




