கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த அண்ணாமலை கார்டன் குடியிருப்பு பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெண்கள், குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் என பலரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் எங்களது குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் நிர்வாகம் தங்களது கடையை திறக்க அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை கேள்வியுற்று இந்த பகுதி மக்கள் அனைவரும் கடும் கவலைக்கு உள்ளாகி உள்ளோம்…

குடியிருப்பு பகுதிகளுக்குள் டாஸ்மாக் கடை திறக்க படுவதால், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டும், பொது ஒழுங்கு மற்றும் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும், இதனால் இந்த பகுதி மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கை பாதிக்கபடும், எனவே சமூக நலன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எங்களது குடியிருப்பு பகுதிகளுக்குள் டாஸ்மாக் கடையினை திறக்க கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் லிங்க ராஜ் கூறியதாவது..
எங்களது பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.

ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் இந்த கடைக்கு அருகிலேயே ஒரு காலை 11மணி முதல் இரவு 11 மணி வரை இயங்க கூடிய நவீன டாஸ்மாக் பாரை திறக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த கடை இந்த பகுதிகளில் வந்தால் தினமும் சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனுக்குடன் இந்த கடையை வேறு பகுதியில் வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களுடன் மனு அளித்துள்ளதாக கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது அண்ணாமலை குடியிருப்போர் நல சங்க செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சின்னசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது




