அரியலூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆய்வுக் கூட்டம்,மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்தது . ஆய்வு கூட்டதிற்கு இளைஞர் காங் அரியலுார்
மாவட்ட தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி தலைமை வகித்தார் .

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சாம் வர்க்கீஸ் முன்னிலைவகித்தார்.கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் அதிக அளவில் இளைஞர்களை உறுப்பினர்சேர்ப்பது ,
இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்,பூத் கமிட்டி கூட்டத்தை அனைத்து வட்டாரங்களில் நடத்துதல்,விடுபட்ட வாக்காளர்களை அடையாளம் கண்டு Form-6 விண்ணப்பிக்க உதவுதல், மேலும் அரியலூர் மாவட்டத்திலுள்ள இரு சட்டமன்ற தொகுதியில் ஏதாவது ஒன்றினை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் கோருதல் உள்ளிட்ட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தலின்படி வாக்குத்திருட்டு பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள்பாரதி,தினேஷ்,ஐசக் நியூட்டன் மற்றும் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் நிக்கோலஸ்ராஜ் பங்கேற்றனர்.ஆய்வுக் கூட்டத்தினைதொடர்ந்து ,அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸார் ஏற்பாட்டில் உலக ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

உலக ஒற்றுமை தினத்தை அரியலூரில் உள்ள சாந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்க ளுக்கு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காலை உணவு வழங்கப் பட்டது. அதனைதொடர்ந்து உலக மக்களிடம் அகிம்சை மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி அதன்படி வாழ்ந்த மகாத்மா காந்தி சிலைக்கு, மாவட்ட இளைஞர் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மேலிட மாவட்ட பொறுப்பாளர் பிரசன்னா மற்றும் சக்தி அபியான் மாநில ஒருங்கிணைப் பாளர் ஜெயந்தி, அரியலூர் தெற்கு வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிகளின் முடிவில், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ஆனந்தராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.




