அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பசுமை தமிழ்நாடு இயக்கம் – மரக்கன்றுகள் நடும் விழாவினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, துவக்கி வைத்து,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மாநிலத்தின் பசுமைப் பரப்பை வலுப்படுத்துவதில் தனியார் தொழில்நிறுவனங்கள், குடிமைச் சமூகம் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பயனுள்ள கூட்டாண்மையை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் / பவுண்டேஷன் (ExNoRa), பசுமைத் தமிழ்நாடு இயக்கம் (GTM) , சோலைவனம் அறக்கட்டளை மற்றும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) ஆகியவற்றுடன் இணைந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரம் நடும் விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகம் மற்றும் அரியலூர் மாவட்ட அருங்காட்சியக வளாகத்திலும் 55 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட வனத்துறை மற்றும் சோலைவனம் அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், மாவட்ட வன அலுவலர் த.இளங்கோவன், சோலைவனம் அறக்கட்டளை நிறுவனத்தினர் மற்றும் இதர அரசு துறை அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




