மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்து பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இக்கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையிலும், நீர்த்தேக்க தொட்டி பில்லர்கள் கீறல் ஏற்பட்டு கம்பிகள் துருப்பிடித்த நிலையில் உள்ளது.,தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீர்த்தேக்க தொட்டியினை அகற்றி விட்டு மாற்று மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியினை கட்டித் தரவேண்டும் என கிராம பொதுமக்கள் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மாற்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




