விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .

வாகனம் ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்து வாகன ஓட்ட வேண்டும் மது அருந்திவிட்டு வாகன ஓட்டக் கூடாது என உறுதிமொழி ஏற்கப்பட்டது .
அதைத் தொடர்ந்து தலைக்கவசம் உயிர்க்கவசம். சமூக பொறுப்புடன் வாகனங்கள் ஓட்ட வேண்டும். போதை தவிர நல்ல கல்வி என்னும் பாதையில் நிமிர் . என்ற பதாகைகளை ஏந்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை இராஜபாளையம் சார்பு நீதிபதி சண்முகவேல்ராஜ் கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பிரசன்னா .மாவட்ட உரிமையியல் நீதிபதி ராமநாதன் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர் பேரணியில் ஏற்பாடுகளை இராஜபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் செய்திருந்தார்
இந்த நிகழ்ச்சியில் இரஜபாளையம் வடக்கு காவல் ஆய்வாளர்
அசோக் பாபு .தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் . நகர போக்குவரத்து ஆய்வாளர் சீமான் . தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளர் வள்ளியம்மாள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் இராஜபாளையம் போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைகவசம் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்




