• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஒரே நேரத்தில் 5 முக்கிய தொழில்துறை கண்காட்சிகள்..,

BySeenu

Dec 11, 2025

கோவை, டிசம்பர் 11, 2025 – நாட்டின் முன்னணி பி 2 பி (தொழில் முதல் தொழில்) கண்காட்சியை மீடியா டே மார்க்கெட்டிங் என்ற நிறுவனம் இன்று கோவை கொடிசியா வளாகத்தில் துவக்கியுள்ளது. ஒரே நேரத்தில் ஐந்து முக்கிய தொழில்துறை கண்காட்சிகள் இங்கு நடைபெறுகின்றது. இன்று டிசம்பர் 11 முதல் 13 வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பிளாஸ்டிக் மற்றும் கழிவு தொழில்நுட்பம், உணவு, பானம், பால் ஆகிய துறைகள் சம்பந்தமான இயந்திரங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஐந்து கண்காட்சிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. உணவு, பால் பதப்படுத்துதல், பானங்கள், தேநீர் – காபி, பிளாஸ்டிக் உற்பத்தி, மறுசுழற்சி தொழில்நுட்பம், தானியங்கு இயந்திரங்கள், பொருள் மூட்டுதல் போன்ற துறைகளின் புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

70 ஆண்டுகளுக்கும் மேலான தேயிலை வர்த்தக அனுபவம் கொண்ட சரஃப் டிரேடிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் பிராண்டான சன் டிப்ஸ், பங்கேற்றுள்ளது. தொழில்துறை நிபுணர்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள், வணிக ஆலோசகர்கள், துவக்க நிறுவனங்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த நிகழ்வு பயனளிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்காட்சிகள் வரும் டிசம்பர் 11 அன்று காலை 11.30 மணிக்கு தமிழக பால் மற்றும் பால் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களால் தொடங்கி வைக்கப்படுகின்றன. நிகழ்வில் தென்னிந்திய தோட்டக்கலை சங்க (உப்பாசி), திரு. அஜய் திப்பையா, இந்திய தொழில் வர்த்தக சபைகளின் தலைவர் திரு. ராஜேஷ் பி லுண்ட், கொடிசியா தலைவர் திரு. எம். கார்த்திகேயன் உட்பட தொழில் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

பால் மற்றும் உணவுத் துறையில் பங்கேற்கும் நிறுவனங்களில் அரோமா மில்க் புராடக்ட்ஸ், நெக்ஸ்ட் ஜென் டெய்ரி டெக், கண்டினென்டல் காபி, சன் டிப்ஸ், ஸ்பைசிஸ் லிமிடெட், விண்ட்சர் சாக்லேட்டியர், அம்ருதா காபி, தி யூனைடெட் நீலகிரி டீ எஸ்டேட்ஸ் நிறுவனம், சோட்டு கிசான் ஆகியவை அடங்கும்.

பிளாஸ்டிக் மற்றும் கழிவு தொழில்நுட்பத் துறையில் பங்கேற்கும் நிறுவனங்களில் பிரேக்ஸ் இந்தியா, முந்த்ரா மாஸ்டர்பேட்சஸ், ப்ரோமேக் இண்டஸ்ட்ரீஸ், வர்த்மான் இண்டஸ்ட்ரீஸ், ரெய்னி இண்டஸ்ட்ரீஸ், எக்ஸ்ட்ரூஷன் டெக், எஸ்.எல்.பி. குழுமம், ஆதிநாத் பாலிமர்ஸ், ப்ரோ பைப்ப்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், இஷித்வா ரோபாட்டிக்ஸ் சிஸ்டம், கப்சன் ரிசோர்சஸ் கார்ப்பரேஷன் ஆகியவை உள்ளன.