கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணம் செய்யும் வகையில், புதிய ‘குமரி காவலன்’ ஏ.ஐ இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் திரிவேணி சங்கமத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த இயந்திரத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சுற்றுலா பயணிகள் தகவல்களை பெறுவதும், அவசர சேவைகளை பயன்படுத்துவதும் சாத்தியமாகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு பெரிய உதவியாக இருக்கும்.


இந்த வசதியின் மூலம் கைப்பை, தொலைபேசி, பணம், நகை, குழந்தை அல்லது உடன் வந்தவர்கள் போன்றோர் மாயமானால், பயணிகள் தங்கள் மொழியில் நேரடியாக குரல் பதிவு செய்து புகார் அளிக்கலாம். தகவல் உடனே அருகிலுள்ள காவல் நிலையமும் ரோந்து காவலர்களுக்கும் சென்றடையும்.
அவசர அழைப்பு வசதி மூலம் தங்களிடம் கைபேசி இல்லாத சூழலில், பயணிகள் இலவசமாக ஒரு நிமிடம் தங்களது உறவினர்களோ நண்பர்களோடு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

யாரேனும் நகை, கைப்பை, சாவி, பணம் போன்ற பொருட்களை அந்தப் பகுதியில் கண்டெடுத்தால், அதைப் பதிவு செய்யலாம். பதிவு செய்தவுடன் ரோந்து காவலர்களுக்கு தகவல் சென்றடையும்; அவர்கள் காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.
சுற்றுலா தகவல் வசதியால் கன்னியாகுமரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாத்தலங்கள், அவற்றின் தூரம், செல்ல வேண்டிய நேரம் போன்ற விவரங்களை பயணிகள் எளிதாக அறிந்துகொள்ளலாம். கியூ ஆர் கோடு மூலமும் தகவல்கள் கிடைக்கும்.
அவசரநிலைகளில் உதவி பெற எஸ்.ஓ.எஸ் பட்டன் உதவும். இதை அழுத்தியவுடன் அருகிலுள்ள காவலர்கள், ரோந்து குழு, காவல் நிலையம் ஆகியவற்றிற்கு தகவல் சென்றடையும். வீடியோ அழைப்பின் மூலம் உடனடி உதவியும் வழங்கப்படும்.

மேலும் கன்னியாகுமரி பகுதியில் காவல் கட்டுப்பாட்டு அறை எண், பெண்கள் உதவி எண், ரோந்து காவலர் எண் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய எண்களும் ஒரே இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏ.ஐ யுடன் பேசும் வசதியின் மூலம் பயணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய விவரங்களை ஏ.ஐ முறையில் கேள்வி கேட்டு பெற முடியும். சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு அற்புதமான தகவல் உதவியாளராக செயல்படும்.
கன்னியாகுமரி மூன்று கடல்கள் சங்கமம் பகுதியில்
நிறுவப்பட்டுள்ள
புறக் காவல்துறை நிலையம் மிக நவீன வடிவத்தில், குமரி காவல் இயத்திரத்துடன். உலக சுற்றுலா பயணிகளுக்கு உதவும், இந்த தகவல்
அமைப்பை.
வடக்கன் குளத்தில் உள்ள ஜாய் பல்கலைக்கழகத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில். குமரி மாவட்ட ஆட்சியர்
டாக்டர்.ஸ்டாலின் ஜாய் பல்கலைக்கழகம் பதிவாளர் முத்துக்கண்ணனுக்கு சால்வை அணிவித்து நன்றி
தெரிவித்தார்.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் (பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு), நாகசங்கர் (இணையவழி குற்றப்பிரிவு), கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், ஆய்வாளர்கள் சுந்தர்ராஜ் பெருமாள், அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் பயணிக்க இந்த ‘குமரி காவலன்’ ஒரு முக்கிய முன்னேற்றமாக காவல்துறை தெரிவித்துள்ளது.




