டாக்டர்.அம்பேத்காரின் 69வது நினைவு தினத்தையொட்டி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாஜக பட்டியலணி சார்பில் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
திருநள்ளாறு, அம்பகரத்தூர், சேத்தூர், செல்லூர், சுரக்குடி உள்ளிட்ட தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாஜக பட்டியலணி மாநில துணைத் தலைவர் கார்த்தி, பட்டியலணி மாவட்டத் தலைவர் கஜேந்திரன், பட்டியலணி தொகுதி தலைவர் சுதாகர், திருநள்ளாறு தொகுதி பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், சிவபாலன் ள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அனைவரும் பேரணியாக வந்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கார் முழுவுருவ வெண்கலச்சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட தலைவர் முருகதாஸ் உள்ளிட்ட மாநில மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அம்பகரத்தூர் பகுதியில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு நிகழ்ச்சிக்கு பின்னர் அப்பகுதியில் மழையால் சேதம் அடைந்த 100 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தார்ப்பாய்களை வழங்கினார்.