புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட செயங்கைத்தோப்பு பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
ஸ்ரீ ராஜ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது .

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜான் வில்லியம்ஸ், A பிரபாகரன் ,சித்த மருத்துவர் எஸ் முருகேசன், போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் சிறுவர்களாகவும் மழலைகளாகவும் இருந்த நிலையிலும் அவர்கள் தாங்கள் புரிந்து அறிந்து வைத்த பொருட்களைக் கொண்டு கண்காட்சிகள் அமைத்திருந்தனர்.


அதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உதவினர் என்றாலும் இந்த கண்காட்சியை தங்கள் தான் நடத்தி இருக்கிறோம் என்பதை ஒலிபெருக்கியில் தங்களது திறமை குறித்து விளக்கிய போது பெற்றோர்களும் மற்றவர்களும் வியக்கும் வண்ணம் இருந்தது.




