5 ஆண்டுகளில் 467 ஆக்கிரமப்பாளரிடமிருந்து பழநி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ரூ.1,316 கோடி சொத்துகள் மீட்கப்பட்டது. திண்டுக்கல், பழநி திருக்கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலங்களையும், கட்டிடங்களையும் தனியார் பலர் ஆக்கிரமித்து இருந்தனர். இந்த சொத்துகளை மீட்கும் முயற்சியில் 2.4 கி.மீ. தூரமுள்ள கிரிவலப்பாதையில் ஆக்கரிமப்பு கடைகள், குடியிருப்புகள், கட்டிடங்கள் அகற்றப்பட்டு ரூ.156 கோடி மதிப்பிலான 329 சொத்துகள் மீட்கப்பட்டன.

தொடர்ந்து, திண்டுக்கல், திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆக்கிரமிப்பில் இருக்கும் சொத்துகளை மீட்டு வருகின்றனர். அந்த வகையில் 2022 மே முதல் டிசம்பர்-3 வரை கடந்த 3 1/2 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பில் இருந்த 137.95 ஏக்கர் நிலங்கள், 8.52 லட்சம் சதுர அடி மனைகள் மற்றும் 86 ஆயிரத்து 943 சதுர அடி கட்டிங்கள் மொத்தம் 467 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ.1,316 கோடி ஆகும்.








