குத்துச்சண்டை சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டை சங்க செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு பஞ்சலிங்கபுரம் கே.கே.ஆர். அகாடமி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட குத்துச்சண்டை சங்க செயலாளர் கே.கே.ஹெச்.ராஜ் தலைமை வகித்தார்.

இதில், கன்னியாகுமரி மாவட்ட தலைவராக ஜஸ்டின் ராஜ், பொருளாளராக நிக்சன் ராஜ், துணை செயலாளராக எஸ்.ஆர்.முருகன், செயற்குழு உறுப்பினர்களாக சித்தார்த், ஜெயச்சந்திரன், ஜாண் பெலிக்ஸ், ராஜ் லார்ட் ஜோஸ்பின், ரகு, மணீஷ், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில், போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் குத்துச்சண்டை குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.









