அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவல செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகப்ரியாவை அரியலூர் மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்ச ங்கத்தின் நிர்வாகிகள், அச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம் தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் .

அம்மனுவில் ,தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வட்டாரப் போக்கு வரத்து அலுவலகங்களில் நடைபெறும் லஞ்ச ஊழலை தடுத்து நிறுத்திட வேண்டும். சொந்த பயன்பாட்டிற்கு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங் களிலேயே சொந்த பயன்பாட்டிற்கு வாகனங்கள் மாத வாடகைக்கு பயன்படுத்தப்படுகிறது. அதை உடனே தடுத்து நிறுத்திட வேண்டும் மேக்ஸி கேப் வாகனங்களுக்கு இதுவரை உள்ள 12 + 1 சீட் பர்மீட்டை உயர்த்தி தரவேண்டும்.

ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு மற்றும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும். ஓலா,ஊபர்,போர்ட்டர் நிறுவனங்களை முறைப்படுத்தி கால் டாக்ஸிகளுக்கு உரிய கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கை அம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆர் மணிகண்டன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெ அப்பாஸ்,மாவட்ட இணை செயலாளர் எம் சரவணன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சஹானா து.காமராஜ்,மாவட்ட செய்தி தொடர்பாளர் கே.கார்த்திகேயன்,மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஆர் ராஜ்குமார், டி நாடி முத்து, எஸ் ஜமால் முஹம்மது உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.








