விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மண்குண்டாம்பட்டி முக்கு ரோடு வெம்பக்கோட்டையிலிருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருந்த உயர் மின் கோபுர விளக்கு கடந்த சில தினங்களாக பழுதடைந்து இருந்தது. இதனால் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், இரவு நேரங்களில் சிரமப்படுவதாக அரசியல் டுடேவில் செய்தி வெளியிடப்பட்டது.

செய்தி எதிரொலி காரணமாக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின் விளக்கை மாற்றி அமைத்து செயல்பட வைத்தனர். இதனால் இப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட அரசியல் டுடே க்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.








