• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதிய மெல்பான் கிளையைதிறந்து வைத்த சுல்தான் அமீர்..,

BySeenu

Dec 1, 2025

சவூதி அரேபியா,துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அரேபியன் வகை உணவுகளை உணவு பிரியர்கள் ஆர்வமுடன் ருசித்து வருகின்றனர்.

அந்த வகையில் அரேபியன் வகை டெசர்ட் உணவுகள் விற்பனையில் முன்னனி நிறுவனமான மெல்பான் கோவையில் தனது விற்பனை மையங்களை துவக்கி வருகின்றனர்.

ஐஸ் கிரீமுடன் இணைத்து பல்வேறு சுவைகளில் வழங்கப்படும் மெல்பான் டெஸ்ஸர்ட் இனிப்பு விற்பனை தற்போது கோவையில் சூடு பிடித்து வருகிறது.

இந்நிலையில் மெல்பான் (Melbaan) கோவையில் தனது புதிய விற்பனை கிளை, போத்தனூர் சாலையில் உள்ள சங்கமம் திருமண மண்டபம் அருகே துவங்கப்பட்டுள்ளது.

இதற்கான துவக்க விழா மெல்பான் கிளை உரிமையாளர்கள் .சுஹைல் அஹமத்,சாஜித் அஹமத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ஏ.கே.எஸ்.நிறுவனங்களின் தலைவர் சுல்தான் அமீர் கலந்து கொண்டு புதிய மெல்பான் கிளையை. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில்,முதல் விற்பனையை ஹாஜி, இனயாத்துல்லாஹ் துவக்கி வைக்க, எம்.எம்.கே.தலைமை பொருளாளர் ஹாஜி உம்மர்,தி.மு.க.மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் ஆகியோர் முதல் விற்பனையை பெற்று கொண்டனர்..

விழாவில் கவுரவ அழைப்பாளர்களாக, ஶ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவகணேஷ்,86 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஹமது கபீர், ஜமாத்தே இ இஸ்லாமிக் ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம், கோவை மாவட்ட காஜி.அப்துல் ரஹீம் ஹஜ்ரத்,மாலிக் ஹஜ்ரத்,அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத்,அய்யூப் ஹஜ்ரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

விழாவில், தஜ்மல்,அம்ஜத்.பைசல்.சபீர்அலி,முஸ்தபா,இஸ்மாயில்,நாகூர் மீரான்,காஜா முகம்மது,முகமது யாசீன்.சர்புதீன்,அமீர் அப்பாஸ்.உட்பட பலர் கலந்து கொண்டனர்.