• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

செங்கோட்டையனை த.வெ.க_விற்கு அனுப்பியது அமித்ஷா..,

நாகர்கோவிலுக்கு அருகே உள்ள இறச்சகுளத்தில். தனியாரது புதிய மருத்துவ மனையை திறந்த வைத்த தமிழக சட்டமன்ற தலைவர் அப்பாவு, அந்த நிகழ்விற்குப்பின்
செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது.

இலங்கை(கொழும்பு)விமான நிலையத்தில், விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நிலையில் அங்கு தவிக்கும்,தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையை விரைந்து செயல் படுத்த நம் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதிமுக_வை சேர்ந்த மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் ஆகியோரது ‘ராஜினாமா’ ஏற்கப்பட்டு அவர்கள் இருவரும் இப்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இல்லை.

செங்கோட்டையன் ஒரு நல்ல சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற அனுபவம் நிறைந்தவர். அமித்ஷாவின் வழிகாட்டுதலில் தான் செங்கோட்டையன்
த.வெ.க வில் இணைந்துள்ளார்.

சாமி தரிசனம் செய்யப்போனவர் தரிசனம் செய்தது.ஒன்றிய உள்துறை அமைச்சர்
அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரது சந்திப்பில் காட்டிய வழிகாட்டுதலே காரணம். இரண்டு மத்திய அமைச்சர்களை செங்கோட்டையன் எப்படி, எப்படி போய் சந்தித்தார் என்பது எனக்கு தெரியும். செங்கோட்டையன் பாஜகவின் உளவாளியா.? என்ற உங்கள் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

ஒன்றைச் சொல்வேன்.விஜய் அறிவித்த நேரத்தில் வராது, அதற்கு பல மணிநேரம் கடந்து வந்ததுதான்.41_பேரீன் மரணத்திற்கு காரணம். இறந்தவர்களின் குடும்பத்தாரை அவர்களது இல்லம் சென்று பார்க்காது ஓடிய ஒருவரை செங்கோட்டையன் நம்பி சென்றது ஆச்சரியம்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக சட்டமன்ற கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது எனவும்
சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.