தமிழக விளையாட்டு துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 வது பிறந்த நாளான இன்று, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமிட்டான் பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் வசிக்கும் பெண்கள் அனைவருக்கும் புதிய உடைகளை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்.

இந்நிகழ்விற்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார், கோவில்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.ஜெய கண்ணன், கழக பொதுக்குழு உறுப்பினர் திரு.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், திரு.தாமோதரகண்ணன், மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி.மேனகா, விஜயலட்சுமி, கலா, பாலம்மாள், நாலாட்டின்புத்தூர் ஊராட்சி செயலாளர் திரு கிருஷ்ணசாமி, திரு.ராஜி, ராஜாபுதுக்குடியை சேர்ந்த பால்ராஜ் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்…









