தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளினை முன்னிட்டு , அரியலூர் நகர திமுக சார்பில், அண்ணா சிலை அருகே சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் இரா .முருகேசன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக துணை செயலாளர்கள் அருங்கால் சந்திரசேகரன், லதா பாலு, நகர் மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்றத் தொகுதி மேலிடப் பொறுப்பாளர் பா. அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500க்கு மேற்பட்ட
பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் இரா . பாலு , நகர அவைத்தலைவர் மாலா தமிழரசன்,நகராட்சி துணைத் தலைவர் தங்க கலியமூர்த்தி,நகர பொருளாளர் மா இராஜேந்திரன், மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் எல்.கே அருண் ராஜா,மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆ.குணா, மாவட்ட திமுக அயலக அணி நிர்வாகி தங்கை எழில்மாறன் ,மாவட்ட பிரதிநிதிகள் நா .ஜெயக்குமார்,பூக்கடை ராமு,தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர் மகேந்திரன்,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொமுச நிர்வாகிகள் பி.வி அன்பழகன், கனகராஜ்,சாமி நாதன், நகர திமுக துணை செயலாளர் கோ. உத்திராபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








