சிட்லாபாக்கம் பகுதியில் மின்சார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீ சர்வமங்களா நகர் 2-வது பிரதான சாலை மற்றும் உ.வே.சா. நகர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகள் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

பொதுமக்கள் நீண்டநாள் எதிர்பார்த்த இந்த மின் மாற்திகள் நிறுவல், அந்த பகுதிகளில் மினழுத்த குறைபாடு மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்சினைகளை குறைக்கப் பெரிதும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழாவில் தலைமை விருந்தினராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர கழகச் செயலாளர் திரு எஸ். ஆர். ராஜா, எம்.எல்.ஏ., அவர்கள் கலந்து கொண்டு இரு மின் மாற்றிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
விழாவை தாம்பரம் செயற்பொறியாளர் திரு S.K. கருப்பசாமி அவர்கள் முன்னிலை வகித்து நடத்தினார். மின்சார பொருளாதார மேம்பாட்டில் பொதுமக்கள் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் விழாவில் பேசும் போது குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியை சிட்லாபாக்கம் 43-வது வார்டு மாநகராட்சி உறுப்பினரும், மாநகர பணிகள் குழு உறுப்பினருமான Ln. சி. ஜெகன், B.Tech., M.B.A., LLB., M.C., அவர்கள் ஏற்பாடு செய்து சிறப்பித்தார்.
சிட்லாபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மின் மாற்றிகள் திறப்பை வரவேற்று, ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த திறப்பு விழா அந்தப் பகுதியில் மின்சார வசதிகளை மேலும் வலுப்படுத்தும் புதிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது.








