கேட் கீழே விழுந்ததில் சில இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தாலும், பெரும் சேதம் ஏற்படாமல் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டமானதாக கூறப்படுகிறது. சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து ஓரங்கட்டினர். பின்னர் ரயில்வே பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக ஓடிவந்து கேட்டை மீண்டும் உயர்த்தி வாகனங்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேட் இயங்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறே காரணமாக இருக்கலாம் என ஆரம்ப நிலையில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், எச்சரிக்கை மணி செயலிழப்பு மற்றும் கேட் இயந்திர பராமரிப்பில் குறைபாடு இருந்ததா ? என்பதை ரயில்வே பொறியியல் பிரிவு ஆய்வு செய்து வருகிறது.

கிராசிங்கில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.








