• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் : கனிமொழி எம்.பி. பேட்டி…

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தாமிரபரணி ஆற்றில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, ஏரல் உயர்மட்ட பாலத்தின் வடப்பகுதியில் இணைப்பு சாலை பலத்த சேதமடைந்தது. தற்போது அந்த பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. தற்போது ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டத்தில் பழைய பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் ஓடுகிறது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதையடுத்து   கனிமொழி எம்.பி ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு வந்தார். அவர் உயர்மட்ட பாலம் மற்றும் தண்ணீரில் மூழ்கியுள்ள பழைய பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆற்றுப்பாலத்திற்கு கீழ்புறம் மற்றும் மேல்புறம் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துவிடாமல் தடுக்க பாலத்தின் அருகில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம். ஏரல் பேரூர் செயலாளர் ராயப்பன், ஏரல் பேரூராட்சி தலைவர் சாமிளாதேவி மணிவண்ணன், வியாபாரிகள் சங்க செயலாளர் மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதி தியாகராஜன், பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்துமாரி, ஜவபாசாதிக, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முத்துமாலை, மாவட்ட விவசாய தொழிலாளா அணி துணை அமைப்பாளர் பாலமுருகன். துணை அமைப்பாளர் பாலமுருகன். ஒன்றிய பொருளாளர் பத்திரகாளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை ஆய்வு ெசய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்த பிறகு ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு நிகழ்விடம் மழையால் சேதம் அடைவது குறித்து பாராளுமன்றத்தில் பேசுவேன்’ என்றார்

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் கொம்பையா, தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகப்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.”