மதுரை உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்ல தாது நாயக்கன்பட்டி கிராமத்திற்கு மின்விளக்கு வசதி இல்லை என சமூக சேரும் வழக்கறிஞருமான இளமகிழனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சமூக சேரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் இளமகிழன் மின்வாரிய அதிகாரி உடன் பேசி தனது சொந்த நிதியிலிருந்து மூன்று லட்சம் மதிப்பில் மின் விளக்குகள் பொருத்தித் தந்தார். அதனை தொடர்ந்து கிராம மக்கள் வழக்கறிஞர் இளமகிழனுக்கு நன்றி தெரிவித்தனர்.









