• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு..

ByS. SRIDHAR

Nov 19, 2025

பிரதமர் தமிழகத்திற்கு இன்றுவந்த பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை கொடுத்துள்ளார். தற்பொழுது தான் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது..

திமுக ஒரு பக்கம் கால அவகாசம் தேவையான கூறிக்கொண்டு மறுபக்கம் எஸ் ஐ ஆர் தேவை இல்லை என கூறி வருகின்றனர். நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம்.. அவர்கள் மாறி மாறி பேசி வருகின்றனர்.

வாக்கு சீர்திருத்தம் என்பது தேவையானது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது எஸ் ஐ ஆர் பணி நடைபெறுகின்றது. அதாவது தற்பொழுது நடைபெற்று வரும் பணியில் ஒவ்வொரு வீடாக செல்லும் போது தான் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கின்றது ஆனால் அந்த முகவரியில் அவர்கள் இல்லை அவர்கள் இறந்துள்ளனர் என்ற தகவல் தெரிகின்றது மேலும் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியும் இதன் மூலம் தான் செய்ய முடியும்.

இதனை இதனால் தான் அதிமுக எஸ் ஐ ஆர் ஆதரிக்கிறது அதைத்தான் எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் எஸ் ஐ ஆர் தேவை எனக் கூறுகிறார்..
எந்த அரசியல் கட்சியினரிடமும் படிவங்களை கொடுக்கக் கூடாது என்று தான் நாங்கள் கூறுகின்றோம்..

அது மிக மிக முக்கியமான விஷயம். இப்பொழுதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் படிவங்களை ஒரு குறிப்பிட்ட கட்சியினரிடம் கொடுத்து வருவதாக தெரிகின்றது அது பற்றி நாங்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளோம்.. இந்தப் பணி வெளிப்படையாக நேர்மையாக ஒளிவு மறைவின்றி நடக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கை..

தமிழக முழுவதும் எஸ் ஐ ஆர் எனப்படும் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த பணியில் நான் சார்ந்திருக்கும் அகில இந்திய அண்ணா திமுக சார்பில் அனைவரும் களப்பணி ஆற்றிக் கொண்டிருக்கின்றோம்.

அதிமுக சார்பில் நடைபெறுகின்ற இந்த பணியில் எங்கள் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பி எல் எ 2 மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள்.பி எல் ஓ அதிகாரிகளுடன் இணைந்து அரசு நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து அவர்களுக்கு உறுதுணையாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.. பணிகள் மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது இன்னும் மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
என்பது எங்களுடைய கருத்து.

இன்னும் அதிகமாக மக்களிடையே குறிப்பாக கிராமத்து மக்களிடையே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்வதற்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்கள் வீட்டுகளுக்கும் இரு முறைக்கும் மேல் செல்ல வேண்டும் ஏனெனில் அவர்கள் பணியின் காரணமாக வெளியில் சென்று இருப்பார்கள் அரசு அதிகாரிகளுக்கு நல்ல பயிற்சி கொடுத்து உள்ளார்கள் இன்னும் அதிக பணியாளர்களை நியமிக்க வேண்டும் மிகக் கடுமையான பணி தான் இருந்தாலும் அதனை புரிந்து கொண்டு நல்ல முறையில் இதனை செயல்படுத்த வேண்டும் அப்படி இருந்தால் தான் பணிகளை விரைவு படுத்த முடியும் பணிகள் மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.. விஜயபாஸ்கர் கூறினார்.