வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து, தூத்துக்குடியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்பதால் இப்பணிகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதன்படி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலாளர் சுபத்திர ஜெகேஆர் முருகன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கிஷோர், எஸ்டிஆர் சாமுவேல்ராஜ், அஜிதா ஆக்கினால், வழக்கறிஞர் பிரைட்டர், விஜி சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் கோல்டன், ஆனந்தகுமார், அண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
