கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தில் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக்கோப்பை கனிமொழி எம்பி அறிமுகப்படுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக்கோப்பை அறிமுக நிகழ்ச்சி, நடைபெற்றது.

விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வி.மார்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கருணாநிதி மற்றும் பலர் உடனிருந்தனர்! கோவில்பட்டி தனி மாவட்டம். ஆக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.











; ?>)
; ?>)
; ?>)